உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'யாரும் பயப்படக்கூடாது' - தன்னைத்தானே கலாய்த்த அறந்தாங்கி நிஷா!

'யாரும் பயப்படக்கூடாது' - தன்னைத்தானே கலாய்த்த அறந்தாங்கி நிஷா!

அறந்தாங்கி நிஷா அடையாளமே தெரியாத வகையில் அதிகமாக மேக்கப் போட்டுள்ள தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, அதற்கு கேப்ஷனாக 'யாரும் பயப்படக்கூடாது' என பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவி காமெடி ஷோக்களில் ஒற்றை பெண்ணாக கலக்கி வருபவர் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் சீசன் 4-லும் போட்டியாளராக கலந்து கொண்டார். தனது நகைச்சுவையான பேச்சாற்றலால் ரசிகர்களை கவர்ந்துள்ள நிஷா, காமெடி ஷோக்களில் மற்றவர்கள் தன்னை கலாய்க்கும் முன், தன்னைத்தானே கலாய்த்து கொள்வார். தற்போது அவர் ஒரு போட்டோஷூட்டுக்காக அதிகமாக மேக்கப் போட்டுக் கொண்டுள்ளார். அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிஷா, தனது ஸ்டைலில் வழக்கம் போல் 'யாரும் பயப்படகூடாது' என பதிவிட்டு மற்றவர்கள் கலாய்க்கும் முன் முந்தி கொண்டார். இருந்தாலும் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் எந்த கடையில பெயிண்ட் வாங்குனீங்க என நிஷாவை வைத்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !