உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் சரணின் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

ராம் சரணின் 'பெத்தி' படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?


'உப்பேனா' பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வரும் படம் 'பெத்தி'. இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு, ஷோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படம் ஏற்கனவே வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். ஆனால், மார்ச் மாதம் நெருங்கிய நிலையில் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு மீதமுள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடித்து மார்ச் மாதத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்பதால் ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !