தனுஷ் தந்த ஐடியாவின் மூலம் இயக்குனர் ஆனேன் : கென் கருணாஸ்!
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முதல்முறையாக இயக்குனராக 'யூத்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகியுள்ளனர். இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வெஞ்ஜரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கென் கருணாஸ் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது: எனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என ஐடியா வந்தது இல்லை. 'வாடா ராசா'னு நான் ஒரு ஆல்பம் பாடலை வெளியிடுவதற்காக தனுஷ் சாரை சந்தித்தேன். தனுஷ் சார், என்ன பண்ணிட்டு இருக்க? என கேட்டார், 'சும்மாதான் சார் இருக்கேன்' என கூறினேன். அப்போ அவர்தான், 'டைரக்சன் கத்துக்கோ. என் படங்களில் நீ உதவி இயக்குநராக வேலை பண்ணு என கூறி, 'திருச்சிற்றம்பலம்', 'வாத்தி', 'ராயன்' என மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்ற வைத்தார். ராயன் படத்தில் பணியாற்றி இருந்த சமயத்தில் நான் எழுதிய கதை தான் இந்த 'யூத்'. இவ்வாறு கூறியுள்ளார்.