'வாரணாசி' படத்தில் மற்றொரு பாலிவுட் நடிகை!
ADDED : 2 days ago
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் கதை களத்தில் ராமாயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தொடர்ந்து ராஜமவுலி தொடர்ந்து பாலிவுட் நடிகைகளை ஹிந்தி மார்கெட்டுக்காக பயன்படுத்தி வருகிறார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.