'ஸ்பிரிட்' படத்தில் வில்லன் யார் தெரியுமா?
'அனிமல்' படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் 'ஸ்பிரிட்' எனும் படத்தை தனது 25வது படமாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இதில் த்ரிப்தி டிம்ரி, பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஸ்பிரிட் படம் 2027ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று திரையரங்குகளில் உலகளவில் 8 மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே 'வருஷம்' எனும் படத்தில் பிரபாஸூக்கு வில்லன் கதாபாத்திரத்தில் கோபிசந்த் வில்லன் ஆக நடித்திருந்தார். இப்போது 22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபாஸ், கோபிசந்த் இருவரும் இணைகின்றனர் என பரபரப்பாக பேசப்படுகிறது. கோபிசந்த் தமிழில் 'ஜெயம்' படத்தில் வில்லன் ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.