'ரைட்டர்' பட இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்!
ADDED : 2 days ago
இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தமிழில் 'லவ் டுடே, டிராகன், டூட் என தொடர் வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் 'எல்.ஐ.கே' படம் ரிலீஸூக்கு தயாராகவுள்ளது.
இதையடுத்து மீண்டும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பதற்காக மட்டும் கதைகளைக் கடந்த சில மாதங்களாக கேட்டு வந்துள்ளார். தற்போது 'ரைட்டர்' என்கிற படத்தை இயக்கிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 20 பேர் கூறிய கதையில் இந்த கதையை தான் பிரதீப் ரங்கநாதன் தேர்ந்தெடுத்துள்ளார் என்கிறார்கள்.