சிரஞ்சீவியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!
ADDED : 1 days ago
அனில் ரவி புடி இயக்கத்தில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி திரைக்கும் வந்த படம் 'மன சங்கர வர பிரசாத்காரு'. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 300 கோடி வசூலித்து இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்தபடியாக மல்லிடி வசிஷ்டா இயக்கும் 'விஸ்வாம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மே 9ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வருகிற ஜூலை 10ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் திரிஷா, ஆஷிகா ரங்கநாத், சுரபி குணால், ஈஷா சாவ்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க, எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார்.