'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் வெளியிட்ட தகவல்!
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், சென்சார் பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. ஜனவரி 27ம் தேதி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், இந்நிலையில் இப்பட இயக்குனர் எச்.வினோத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஜனவரி 9ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு அனைத்து வேலைகளையும் செய்து முடித்தோம். ஆனால் எதிர்பாராத சில தடைகளால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எல்லாமே நம்மை மீறி நடக்கிறது. அதனால் இந்த விஷயத்தில் அமைதி காப்பதே அனைவருக்கும் நல்லது. அதோடு வருகிற 27ம் தேதி நீதிமன்றம் நல்ல தீர்ப்பு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதையடுத்து சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்து விட்டால் இப்படத்தை பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடுவதற்கு திட்டமிடுவோம். ஜனநாயகன் படம் தாமதமாக வந்தாலும் கண்டிப்பாக ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெரும். வசூல் ரீதியாக எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய சாதனை செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.