பழனி முருகன் கோவிலில் ராதிகா சாமி தரிசனம்
ADDED : 1597 days ago
நடிகை ராதிகா சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான கிழக்கே போகும் ரெயில் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் தேனி பகுதியை சுற்றி நடந்தது. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பழனியை சுற்றி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு ராதிகா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின் இடைவெளியில் ராதிகா பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர். பழனி முருகன் கோவிலுக்கு வருவது எப்போதுமே எனக்கு சிறப்பானது. பாசிட்டிவான உணர்வுகளை இங்கு நான் பெறுவேன். இந்த முறை கோவிலுக்கு சென்றபோது எனது பழைய நினைவுகள் மனதில் ஓடியது என்று குறிப்பிட்டிருக்கிறார்.