உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இணையத்தில் வைரலாகும் வைஷு சுந்தரின் ஸ்கூல் டிரெஸ் போட்டோஷூட்!

இணையத்தில் வைரலாகும் வைஷு சுந்தரின் ஸ்கூல் டிரெஸ் போட்டோஷூட்!

ராஜா ராணி சீசன் 2-வில் சரவணன் தங்கை பார்வதியாக நடித்து வருகிறார் வைஷு சுந்தர். 12ம் வகுப்பு படிக்கும் போதே நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் டிக் டாக் டப்ஸ்மாஸ்களை வெளியிட்டு வந்த வைஷூ கல்லூரி படிப்பை முடித்த பின் ஷார்ட் பிலிம்ஸ் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு சோஷியல் மீடியாக்களில் பாலோவர்கள் ஏராளம்.


இந்நிலையில், பள்ளிச்சீருடை அணிந்து பள்ளி மாணவி கெட்டப்பில் உள்ள புகைப்படங்களை வைஷூ சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுவரை மாடர்ன் டிரெஸிலும் சுடிதாரிலும் மட்டுமே வைஷுவை பார்த்து வந்த அவரது ரசிகர்கள் சரவணன் தங்கை பார்வதியா இது? என ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !