பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சண்டை காட்சியில் அவர் நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தனக்கு முகத்தில் ஏற்பட்ட காயத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் சின்னது தான், புருவத்தில் எந்த காயமும் இல்லை. கன்னத்தில் தான் காயம் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்கள் வருந்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.