மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1492 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1492 days ago
பிரிக்க முடியாதது நடிகைகளையும் அவர்களது சோஷியல் மீடியா கணக்கையும் என்று சொல்லும் அளவுக்கு நடிகைகள் பலரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் தங்களுக்கென கணக்கு வைத்துள்ளனர். ஆனால் நடிகை ஜோதிகாவுக்கோ இதுவரை எந்த சோஷியல் மீடியா கணக்கு இருந்ததில்லை. இந்தநிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கி இன்று முதல் சோஷியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார் ஜோதிகா.
கடந்த சில நாட்களுக்கு முன் இமயமலை பகுதிகளில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் பயணம் மேற்கொண்ட ஜோதிகா, அங்கே தேசிய கொடியை கையில் ஏந்தி பறக்கவிட்டபடி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது முதல் புகைப்படமாக பதிவு செய்து தேசப்பற்றுடன் தனது கணக்கை துவக்கியுள்ளார். கணக்கை துவங்கிய அரைமணி நேரத்திலேயே 1.2 மில்லியன் பேர் இவரை பின் தொடர ஆரம்பித்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய சாதனை தான்.
மனைவி ஜோதிகா இன்ஸ்டாவில் இணைந்ததை வரவேற்றுள்ள சூர்யா, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக என் மனைவி வலிமையானவர் என்று பதிவிட்டுள்ளார்.
1492 days ago
1492 days ago