120 எபிசோட்களை கொண்ட வெப் சீரிஸ்
ADDED : 1505 days ago
விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸ் ஆதலினால் காதல் செய்வீர். 120 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.
ராஜீவ் கே.பிரசாத் இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸின் திரைக்கதையை வே.கி.அமிர்தராஜ் மற்றும் ஜோ ஜார்ஜ் இருவரும் எழுதியுள்ளனர். இந்த சீரிஸின் டைட்டில் பாடலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ராஜீவ் கே.பிரசாத் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்பில் அருகருகே வசிக்கும் நண்பர்கள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள், பெற்றோருடனான நிலைப்பாடு, நட்பு, காதல் சிக்கல்கள் மற்றும் தங்களது பலநாள் கனவுகளை நிறைவேற்ற அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையாக இது உருவாகியுள்ளது என்றார்.