டைம் லூப் கதையில் மிருணாளினி ரவி
ADDED : 1505 days ago
டிக்டாக்கில் டப்மாஸ் செய்து புகழ்பெற்றவர் மிருனாளினி ரவி. அதுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளையும் பெற்று தந்தது. கொண்டலகொண்டா கணேஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சாம்பியன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அவர் நடித்து முடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன், எனிமி, கோப்ரா படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் ஜாங்கோ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது டைம் லூப் வகை கதை. அதாவது காலத்தில் முன்பும், பின்பும் பயணிக்கிற கதை.
இதில் அவர் சதீஷ்குமார் ஜோடியாக நடிக்கிறார். கருணாகரன், வேலு பிரபாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். மனோ கார்த்திகேயன் இயக்கி உள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ளார்.