15 நாட்கள் படமான அரண்மணை 3 கிளைமாக்ஸ்
ADDED : 1496 days ago
எப்போதுமே நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்கி படம் எடுப்பது சுந்தர்.சி ஸ்டைல். இந்த பாணியில் அவர் எடுத்த அரண்மணை படம் பெரிய வெற்றி பெற்றது. இதனால் அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார். ஆனால் முதல்பாகம் பெற்ற வரவேற்பை இரண்டாம் பாகம் பெறவில்லை. என்றாலும் அரண்மணை 3ம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. இது முதல் இரண்டு பாகத்தை விட இரண்டு மடங்கு பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.
ஆர்யா, ராஷிக் கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கொல்லப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சியும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்னும் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது.
படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் கிராபிக்ஸ் பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
படத்தை பார்த்த முக்கிய பிரமுகர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என்றனர். இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை ஓடிடியில் வெளியிடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் தயாரிப்பாளர் குஷ்பு.