உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் சித்தப்பா தான் என் வழிகாட்டி - சுகாசினி

கமல் சித்தப்பா தான் என் வழிகாட்டி - சுகாசினி

நடிகையும் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியுமான சுகாசினி, நடிகர் கமல் ஹாசனுடனான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சுகாசினி மூத்த நடிகர் சாருஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். தற்போது தெலுங்கில் இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமலுடனான படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுகாசினி. அதில், “விலைமதிப்பற்ற படங்கள். என் ஹீரோ, என் வழிகாட்டி, என் இன்ஸ்பிரேஷன், என் சித்தப்பா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !