உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்: சித்தார்த் கோபம்

என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்: சித்தார்த் கோபம்

ஹிந்தி டிவி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம் அடைந்தார். பிக் பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர். 40 வயதில் நிகழ்ந்த அவரின் மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தின் மரணத்தை தமிழ் நடிகர் சித்தார்த்தின் படத்துடன் சிலர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்

இதனை பார்த்து சித்தார்த் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து சித்தார்த் தனது டுவிட்டரில் வேண்டுமென்றே என்னை குறிவைத்து தாக்குகிறார்கள், என் மீது வெறுப்பை கக்குகிறார்கள் என்று கோபத்துடன் குறிப்பிட்டிருந்தார். சித்தார்த் குறித்து இதுபோன்ற தகவல் வருவது முதன் முறை அல்ல. ஏற்கெனவே இருமுறை வந்திருக்கிறது. இதுகுறித்து அவர் யு டியூப் நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் வழக்கில் கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் நடந்த சோதனை நடவடிக்கைகளை தமிழ் படங்களில் நடிக்கும் சோனியா அகர்வால் வீட்டில் நடந்ததாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !