உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் பிரியாமணி

பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் பிரியாமணி

பவன் கல்யாண், தற்போது ராணாவுடன் இணைந்து பீம்லா நாயக் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தில் டீசர் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் இந்த வருஷத்திலேயே வெளியாக உள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் இந்தப்படத்தை முடித்ததும், அடுத்ததாக ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் பவன்கல்யாண். ஏற்கனவே இந்த கூட்டணி கப்பார் சிங் படத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற கூட்டணி தான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேசி முடித்துவிட்டாராம் ஹரிஷ் சங்கர். ஏற்கனவே அவரது இயக்கத்தில் துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா ராஜு ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் பூஜா ஹெக்டே. அதேசமயம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரியாமணியிடம் பேசி வருகிறாராம் ஹரிஷ் ஷங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !