விரைவில் அரசு திரைப்பட விருதுகள் வழங்கப்படும் : அமைச்சர் தகவல்
ADDED : 1632 days ago
தமிழக சட்டசபையில் நேற்று செய்தி விளம்பரத்துறைக்கான கொள்கை குறிப்பை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் 1968ம் ஆண்டுமுதல் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கப்படவில்லை. இவைகள் விரைவில் வழங்கப்படும். திரைப்பட படப்பிடிப்புகளுக்கான அனுமதியை இனி இணையதளங்கள் மூலமாக வழங்கி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் குறும்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.