மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1460 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1460 days ago
இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான். தனது வீட்டுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்திருப்பதாகவும், தேர்தலின்போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி மாதம் ஒரு முறை மின்கட்டண அளவீடு செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து தங்கர் பச்சான் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் மின்கட்டணம் அதிகமானதற்கான காரணத்தை விளக்கி சென்றனர். பின்னர் இதுகுறித்து சட்டசபையில் பேசிய மின்துறை அமைச்சர், தங்கர் பச்சானுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், தனது புகாருக்கு அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் சட்டசபையில் கூறினார். இதனை தங்கர் பச்சான் மறுத்திருந்தார். இந்த நிலையில் அதே தகவலை மின்துறை அமைச்சர் மீண்டும் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று தங்கர்பச்சான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில் பதில் அளித்துள்ளார். உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டசபையில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதல்வருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.
எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல. மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான். முதல்வர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன்.
இது என்னுடைய வீட்டின் பிரச்னை மட்டுமல்ல; தமிழகத்திலுள்ள அனைவரின் பிரச்னை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
1460 days ago
1460 days ago