ஸ்ருதிஹாசனுக்கு மதிய உணவு அனுப்பிய பிரபாஸ்
ADDED : 1535 days ago
தெலுங்கில் கிராக், வக்கீல் சாப் படங்களுக்குப்பிறகு பிரபாசுடன் சலார் படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தில் வழக்கமான கவர்ச்சி நாயகியில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்தில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே பிரபாஸ் குறித்து தான் வியந்த விசயங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் அவர், தற்போது ஒருநாள் மதியம் பிரபாஸ் தனக்கு அனுப்பிய மதிய உணவை படமெடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, பிரபாஸ் எப்போதும் மிகவும் காவிய உணவை அனுப்புகிறார் என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.