டிசம்பரில் வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ்
ADDED : 1486 days ago
ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ள விஷால் அதையடுத்து து.ப.சரவணன் இயக்கத்தில் தனது முப்பத்தி ஓறாவது படமான வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டெம்பிள் ஹயாதி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் கதைகளில் உருவாகும் இந்த படத்தில் நடித்தபோது விஷாலுக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் தனது பிறந்தநாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஷால், தற்போது தனது டுவிட்டரில் வீரமே வாகை சூடும் படத்தின் இரண்டாம் போஸ்டரையும் வெளியிட்டு டிசம்பரில் இப்படம் வெளியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் .