விஜே அகல்யாவுக்கு சப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி
ADDED : 1582 days ago
காமெடி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் அகல்யா வெங்கடேசன். இவரது சுட்டித் தனமான பேச்சிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். சிறிது காலம் சீரியல்களிலும் நடித்து வந்த அகல்யா, மீண்டும் தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அகல்யா தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரை நடிகர் விஜய் சேதுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த விஜய் சேதுபதி தனது ஷாட் முடிந்தவுடன் அகல்யாவை அவரது புதிய காரில் ஏற்றிக் கொண்டு ரைட் செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.