விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடிய பிரசன்னா - சினேகா; வைரலான குட்டி சினேகா
ADDED : 1536 days ago
கடந்த 10ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகைகளும் தங்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிரசன்னா - நடிகை சினேகா நட்சத்திர தம்பதி, குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் தங்கள் மகன் விஹான், மகள் ஆத்யந்தா உடன் சேர்ந்து இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலானது. குறிப்பாக குட்டி சினேகா (ஆத்யந்தா) பற்றியே அனைவரின் பேச்சும் இருந்தது.