சூப்பர் சிங்கர் மாளவிகாவுக்கு டும் டும்
ADDED : 1484 days ago
பிரபல வீணை கலைஞரான ராஜேஷ் வைத்யாவின் மகள் மாளவிகா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் பாடிய 'ஜெகத்குரு எ டிவைன் மியூசிக்கல்' என்கிற பக்திபாடல் ஆல்பம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
தற்போது மாளவிகா வாழ்வில் மேலும் ஒரு சந்தோஷமான நிகழ்வாக அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிச்சயதார்த்த விழா பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதுடன் பலரும் மாளவிகாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.