குற்றாலத்தில் எதற்கும் துணிந்தவன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
ADDED : 1591 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம், பாண்டிராஜின் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சமீபத்தில் காரைக்குடியில் இந்த படத்தின் 51 நாள் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருந்தார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் துவங்கியுள்ளது. மொத்தம் பத்து நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாவதற்கு தயராகி வருகிறது.