எல்லாம் மாயை - சிம்பு
ADDED : 1483 days ago
சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அதோடு, இப்போது வரை ரஜினி நடிக்கும் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ரசிகராக இருந்து வருகிறார். ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதப் போகிறது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தனது இணைய பக்கத்தில் ரஜினி ஸ்டைலில் சேரில் சாய்ந்தபடி தலைக்கு பின்னால் கைவைத்தபடி போஸ் கொடுக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ள சிம்பு, அதற்கு ரஜினியின் பாபா பட டயலாக்கான எல்லாமே மாயை என்பதை கேப்ஷனாக கொடுத்துள்ளார். இந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது.