உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காஜல் கர்ப்பமாக இருக்கிறாரா?

காஜல் கர்ப்பமாக இருக்கிறாரா?

கடந்தாண்டு கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் அவர் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருவதை அடுத்து நாகார்ஜூனாவுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு உமா என்ற பாலிவுட் படத்திலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக நடிப்பதற்கு சில புதிய பட வாய்ப்புகள் காஜல் அகர்வாலைத் தேடிச்சென்றபோது அவர் அந்த படங்களை ஏற்கவில்லையாம். காஜல் கர்ப்பமாக இருக்கிறார், அதனால்தான் புதிய படங்களை ஏற்க மறுக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து காஜல் வாய் திறக்கும்போதே உண்மையா? இல்லை வதந்தியா? என்பது தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !