25 ஆண்டுகளுக்குப்பிறகு மலையாளத்திற்கு செல்லும் அரவிந்த்சாமி
ADDED : 1482 days ago
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகியுள்ள தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் தமிழ்-மலையாளத்தில் நடிகர் ஆர்யா ஓட்டு என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறார். பெல்லினி இயக்கும் இந்த படத்தில் குஞ்சாகோபோபனுடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக அரவிந்த்சாமியும் நடிக்கிறார். அந்தவகையில் இதற்கு முன்பு மலையாளத்தில் பரதன் இயக்கத்தில் தேவராகம் என்ற படத்தில் நடித்த அரவிந்த்சாமி, 25 வருடங்களுக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கப்போகிறார்.