அக்.,14ல் அரண்மனை 3 ரிலீஸ்
ADDED : 1482 days ago
அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கி, நடித்துள்ள படம் அரண்மனை 3. ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதோடு படத்திற்கான சென்சாரும் முடிந்து, யுஏ சான்று கிடைத்துள்ளது. இதையடுத்து படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற அக்., 14ல் படம் தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரண்மனை 3 படத்திற்கான அனைத்து உரிமைகளையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று(செப்., 15) கையெழுத்தானது.