டுவல்த் மேன் படப்பிடிப்பை துவங்கிய மோகன்லால்
மலையாள திரையுலகில் ரசிகர்கள் விரும்பும் ஹிட் கூட்டணிகளில் ஒன்று தான் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி. கடந்த வருட துவக்கத்தில் மோகன்லால் - த்ரிஷா நடிப்பில் ராம் என்கிற படத்தை துவங்கிய ஜீத்து ஜோசப், அதன்பிறகு கொரோனா தாக்கம் காரணமாக அந்தப்படத்தை பாதியில் நிறுத்திவிட்டு த்ரிஷ்யம்-2வை ஆரம்பித்தார். அந்தப்படம் வெளியாகி ஹிட்டான நிலையில், மீண்டும் ராம் படத்தை தற்சமயம் துவக்க முடியாத சூழல் நிலவுவதால், 'டுவல்த் மேன்' (12த் மேன்) என்கிற புதிய படத்தை துவக்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன் இந்தப்படத்தின் பூஜையும் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ப்ரோ டாடி படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால், ஒரு வார ஓய்வுக்கு பிறகு தற்போது ட்வல்த் மேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். சக நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.