பிரசாந்த் நீலை எரிச்சலூட்டிய ஸ்ருதிஹாசன்
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் பான் இந்தியா படமாகும். இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
சலார் படப்பிடிப்பில் நடக்கும் கலாட்டாக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வரும் ஸ்ருதி, சமீபத்தில் பிரபாஸ் தனக்கு மதிய உணவு அனுப்புவதாக சொல்லி அதை படமெடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, எனக்கு பிடித்தமான டைரக்டர்களை எரிச்சலூட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என கூறியிருப்பவர், அவரை எரிச்சலூட்டுவதை தான் ரசிப்பதாக பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அத்துடன் பிரசாந்த் நீலுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.