காட்பாதர் படப்பிடிப்புக்காக தமிழகம் வருகிறார் சிரஞ்சீவி
ADDED : 1479 days ago
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீ-மேக் படமான காட்பாதரில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. மோகன்ராஜா இயக்குகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. அடுத்து காட்பாதர் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 21-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் நடைபெற உள்ளது. அப்போது சிரஞ்சீவியுடன் இந்த படத்தில் நடிக்கும் நயன்தாரா உள்பட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்ளப் போகிறார்கள். மேலும், தமன் இசையமைக்கும் இந்த காட்பாதர் படத்தை என்.வி.பிரசாத்துடன் இணைந்து ஆர்.பி.செளத்ரி, நடிகர் ராம்சரண் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.