மகளின் பள்ளி சீருடையை அணிந்து வயதை குறைத்த நித்யா தாஸ்!
ADDED : 1502 days ago
நடிகை நித்யா தாஸ் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் சில படங்களிலும், முன்னணி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் ஷ்யாம் நடித்த 'மனதோடு மழைக்காலம்' படத்தில் கதநாயகியாக அறிமுகமான நித்யா, சன் டிவியில் 'இதயம்', 'பைரவி' ஆகிய தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு மக்களின் வீடுகளில் சென்று சேர்ந்தார். தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான 'கண்ணான கண்ணே' தொடரில் யமுனா கதாபாத்திரத்தில் நாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார்.
36 வயதாகும் நித்யா உண்மையில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதைய கதநாயகிகளுக்கு சமமாக இளமை கொஞ்சும் அழகுடன் வலம் வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தனது மகளுடன் பள்ளி சீருடையை அணிந்து இண்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் கண்ணில் பட்டுள்ளது. அதை பார்த்துவிட்டு பலரும் 'இருவரும் அம்மா மகள் போல் இல்லை...அக்கா தங்கச்சி போல தான் இருக்கிறார்கள்' என கூறி வருகின்றனர்.