நாகசைதன்யாவுக்கு நடனம் கற்றுக்கொடுத்த சாய் பல்லவி!
ADDED : 1575 days ago
மாரி-2விற்கு பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய்பல்லவி தற்போது நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரிஎன்ற படத்தில் நடித்துள்ளார் இப்படம் வருகிற 24-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும், ரவுடிபேபி பாடலில் அதிரடி நடனமாடியிருந்த சாய் பல்லவி அதையடுத்து வச்சிந்தே என்ற தெலுங்கு பாடலிலும் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.
இப்படியான நிலையில் லவ் ஸ்டோரி படத்திலும் பாடல் காட்சிகளில் சாய்பல்லவியின் நடனத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால் நாக சைதன்யா சாய் பல்லவி அளவுக்கு நடனமாடக்கூடியவர் இல்லை என்பதால் படப்பிடிப்பு தளத்தில் சில நடன அசைவுகளை சாய் பல்லவியிடம் கேட்டு பயிற்சி எடுத்துக் கொண்டு நடனமாடினாராம். இந்த தகவலை நாகசைதன்யாவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.