உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைக்கில் உலகம் சுற்ற தயாராகிறாரா அஜித்?

பைக்கில் உலகம் சுற்ற தயாராகிறாரா அஜித்?

பைக் பிரியரான நடிகர் அஜித், உலகின் பல நாடுகளுக்கு பைக்கில் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட, ஈரான் நாட்டை சேர்ந்த மாரல் யாசர்லூவை, டில்லியில் சந்தித்து, அவரது பயண அனுபவங்களை கேட்டறிந்தார்.

வினோத் இயக்கத்தில், அஜித் நடித்திருக்கும் வலிமை திரைப்படம், தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்த போது, அங்கு சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் அஜித் பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. பின் இந்தியா திரும்பிய அவர், தாஜ்மஹால் சென்றபோது ரசிகர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து டில்லி சென்ற அவர், பைக் சாகச பெண் யாசர்லூவை சந்தித்து பேசியிருக்கிறார்.

ஈரான் நாட்டை சேர்ந்த மாரல் யாசர்லூ, தன்னந்தனியாக 64 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். இந்த சந்திப்பு குறித்து, அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா, பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல அஜித் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: மாரல் யாசர்லூ உலகின் 7 கண்டங்களிலுள்ள 64 நாடுகளுக்கு தனியாக பைக்கில் சாகச சுற்றுப்பயணம் மேற்கொண்டவர். அவரை சந்தித்த அஜித், எதிர்காலத்தில் பைக்கில் தான் உலக சுற்றுப்பயணம் செல்ல, ஆலோசனை பெற்றுக் கொண்டார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !