மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1445 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1445 days ago
மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வந்த அர்ச்சனா தமிழில் முன்னணி சேனல்களில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை மா கா பா ஆனந்துடன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வந்தார். மேலும் தன் மகளுடன் சேர்ந்து யூ-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். அப்போது அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து பத்து நாட்கள் ஓய்வுக்கு பின் வீடு திரும்பிய அர்ச்சனாவை இனி திரையில் காண முடியுமா என அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது பூரண உடல்நலத்துடன் இருக்கும் அர்ச்சனா விஜய் டிவியில் 'நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். பிரபலங்களின் திருமண நிகழ்வை ரசிகர்களுக்கு படம் பிடித்து காட்டும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது முதல் எபிசோடில் சினேகன் மற்றும் கன்னிகா ரவியின் திருமண வரவேற்பு ஸ்பெஷல் நிகழ்ச்சியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த ஷூட்டிங்கில் அர்ச்சனா கலந்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அர்ச்சனா திரையில் வருவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
1445 days ago
1445 days ago