யுவன் - தெருக்குரல் அறிவு : புதிய அப்டேட் என்ன ?
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா. அவரது இசையமைப்பில் அடுத்து அஜித் நடித்து வர உள்ள 'வலிமை' படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தின் முதல் சிங்கிள் 'நாங்க வேற மாரி' பாடல் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது.
இந்நிலையில் 'எஞ்சாய் எஞ்சாமி' புகழ் தெருக்குல் அறிவு உடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள யுவன், “எனது சகோதரர் தெருக்குரல் அறிவுடன் இரண்டு அற்புதமான அப்டேட்ஸ்” என இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார். அது என்ன அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அது 'வலிமை' படம் பற்றிய ஒரு அப்டேட்டாக இருக்கலாம் என்றும், யுவன், அறிவு இணைந்த ஒரு ஆல்பம் பற்றிய அப்டேட்டாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
யுவனின் பதிவுக்கு நடிகை ஸ்ருதிஹாசனும், 'காத்திருக்க முடியவில்லை,' என்று கமெண்ட் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.