மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1444 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1444 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனலெட்சுமி. இவர் கல்லூரி படிக்கும் காலக்கட்டத்திலேயே சிவா என்பவரை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்த இவரது காதல் கதை சென்ற வருடம் தான் கல்யாணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி உற்றார் உறவினர் சூழ கோலாகலமாக நடந்தேறியது.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவர்களது திருமண நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் வீடியோவையும் தனலெட்சுமி தனது இன்ஸ்டாவில் தற்போது ஷேர் செய்துள்ளார். அதில், 'இந்த பத்து வருட காதல் மற்றும் ஒரு வருட திருமண வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்த அன்பானவருக்கு நான் சொல்வது உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிக்கு பலரும் தற்போது திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
1444 days ago
1444 days ago