மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1444 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1444 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் கதாநாயகி தேவியாக நடித்து பிரபலமானவர் ரக்ஷா. தேவி - மாயன் ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து சொந்த ஊர் சென்ற ரக்ஷா அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாததால் வாய்ப்பை இழந்தார். ஊரடங்கு முடிந்த பின்னும் ரக்ஷாவுக்கு பதிலாக சரவணன் மீனாட்சி ரக்ஷிதா தான் தேவியாக நடித்தார். இதனால் ரக்ஷாவின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் விஜய் டிவியில் பறிபோன வாய்ப்பு அவருக்கு ஜீ தமிழில் கிடைத்துள்ளது. ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள அன்பே சிவம் என்ற தொடரில் நாயகியாக ரக்ஷா நடித்து வருகிறார். அதன் புரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1444 days ago
1444 days ago