83 ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1475 days ago
1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதை தழுவி ஹிந்தியில் 83 என்ற படம் உருவாகி உள்ளது. கபில்தேவ்வாக ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த்தாக ஜீவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கி உள்ளார். கொரோனா பிரச்னையால் தடைப்பட்டு தடைப்பட்டு நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ரிலீஸ் தொடர்பான பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தில் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் இப்படம் உருவாகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர்.