ராஜவம்சம் ரிலீஸ் தேதி மாற்றம்
ADDED : 1475 days ago
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடித்துள்ள படம் ‛ராஜவம்சம்'. யோகிபாபு, சதீஷ் என 40 பிரபல நடிகர்கள் நடித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க குடும்ப படமாக குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படம் அக்., 1ல் படம் ரிலீஸாகும் என அறிவித்தனர். இப்போது திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அதன்படி அக்., 14க்கு ஆயுத பூஜைக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.