உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடக்க தொடங்கினார் யாஷிகா ஆனந்த்

நடக்க தொடங்கினார் யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவானி மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கத் தொடங்கி உள்ளார்.

நடிகர் அசோக் அவரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார், அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு யாஷிகா பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வலுவாக அதிலிருந்து மீண்டு வருவதை கண்டு பெருமைப்படுகிறேன் என்று எழுதியிருக்கிறார்.

யாஷிகா தற்போது கால் எலும்புகள் சரியாகி நடக்க பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !