மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1465 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1465 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1465 days ago
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இளமாறன்(யுடியூப் சேனல் விமர்சகர் புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்தப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்று பிறகு மறு தணிக்கை குழுவால் பார்க்கப்பட்டு பல கட்டுகளுடன் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது: இந்தப்படத்தை எடுக்கும்போதே பின்னால் பெரிய பிரச்சனைகள் வரும் என தெரிந்தே தான் ஆரம்பித்தோம். இதுவரை சென்சார் அமைப்பினர் ஒவ்வொரு படத்திற்கும் ஏதோ ஒரு அடிப்படையில் சான்றிதழ் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்டி இண்டியன் படத்தை பார்த்துவிட்டு இதற்கு எப்படி சான்றிதழ் கொடுப்பது என்றே அவர்களுக்கு புரியவில்லை. மாறன் இயக்கியுள்ள இந்தப்படம், வழக்கமாக அவர்கள் பார்க்கும் படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் அவர்களுக்கே குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஆனால் சென்னை, பெங்களூர், மும்பை என மூன்று இடங்களிலும் படம் பார்த்த சென்சார் கமிட்டியினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றி வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டிருந்தாலும், பார்த்த அனைவருமே இந்த படத்தை பாராட்ட தவறவில்லை. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு எந்தவித நட்டமோ, பாதிப்போ இல்லை. சொல்லப்போனால் லாபம் தான். இப்போதே பலர் இந்தப்படத்தை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். என்றார்.
புளூ சட்டை மாறன் பேசுகையில், நாடே கெட்டாலும் பரவாயில்லை, நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என நினைக்கின்ற சில சுயநல மனிதர்களை குறிக்கும் வகையில் தான் இந்த ஆன்டி இந்தியன் என்கிற தலைப்பை வைத்துள்ளோம். சென்சாரில் இந்த படம் சான்று பெற்று வர கடும் போராட்டத்தை சந்தித்தோம். இறுதியாக நீதிமன்றத்தின் வாயிலாக சான்று பெற்றோம். படத்தில் நிறைய அதிக கட் எதுவும் கிடையாது. ஒரு வசனக்காட்சிக்கு மட்டும் மியூட் போட்டுள்ளோம். மற்றபடி முழுபடமும் வருகிறது. எனது படம் வெளிவரக்கூடாது என்று திரையுலகில் இருப்பவர்களாலேயே அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் படத்திற்கு சான்று மறுக்கப்பட்டது என கேள்விப்பட்டதும் இங்குள்ள சில தியாரிப்பாளர்கள் அதை கொண்டாடினர். இந்தப்படத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஒருவேளை இந்த தலைப்பு மறுக்கப்பட்டால், 'கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமை' என டைட்டில் வைக்கலாம் என்றும் முடிவு செய்து வைத்திருந்தோம். ஓடிடியில் நல்ல விலைக்கு கேட்டு வந்தாலும் கூட, முதலில் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். என்றார்.
1465 days ago
1465 days ago
1465 days ago