சமந்தா தான் என் ரோல் மாடல் - ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1469 days ago
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் திட்டம் 2, பூமிகா ஆகிய படங்கள் வெளியானது. இவர் அடுத்ததாக ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற அர்ஜூனுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். தெலுங்கில் சாய் தரம் தேஜ் நடிப்பில் உருவாகியுள்ள ரிபப்ளிக் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் யாரை முன்மாதிரியாக கருதுகிறார் என்று கேட்டபோது, சமந்தா தான் தனது ரோல் மாடல் என்று தெரிவித்துள்ளார்.