மேலும் செய்திகள்
'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர்
1439 days ago
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1439 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1439 days ago
மலையாள திரையுலகில் அவ்வபோது பேன்டஸி கலந்த வரலாற்று கதைகளை படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் என்கிற படம் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கடமட்டத்து கத்தனார் என்கிற பேய் ஓட்டும் பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயசூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. காரணம் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் பணி புரிவதற்காக ஹாலிவுட்டிலிருந்து எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்து வராமல் கேரளாவில் உள்ள மிகச்சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ரோஜின் தாமஸ். அதேசமயம் படத்தில் இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை விட அதில் சொல்ல இருக்கின்ற கதைதான் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரோஜின் தாமஸ்
1439 days ago
1439 days ago
1439 days ago