ஜன.,7ல் ஆர்ஆர்ஆர் படம் ரிலீஸ்
ADDED : 1462 days ago
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திர போராட்ட பின்னணியில் வரலாற்று படமாக இந்த படம் உருவாகி உள்ளது. அக்டோபர் மாதம் 13ம் தேதி இப்படம் வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி வேலைகள் நடக்காத காரணத்தால் பட வெளியீடு தள்ளிப் போனது.