மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1460 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1460 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1460 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1460 days ago
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வந்த பவனி ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது மீண்டும் திரைக்கு வந்துள்ளார். விஜய் டிவியின் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் பவனி ரெட்டி. இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக வாழ ஆசைப்பட்ட பவனிக்கு பேரிடி ஒன்று காத்திருந்தது. பவனியின் கணவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில் பலரும் பவனியின் மீது விமர்சனங்களை வைத்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்துள்ள பவனி தன் கணவர் இறந்தது குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் நிகச்சியில் பேசிய அவர், 'திருமணத்திற்கு பின் குடும்ப பெண்ணாக வீட்டை பார்த்துக் கொள்ள நினைத்தேன். திருமண வாழ்க்கை நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் இன்னொருவரை குற்றம் சொல்வார்கள். என்ன நடந்தது என யாரும் யோசிக்க மாட்டார்கள். எனக்கு பெரிய இழப்பு அது. வலியுடன் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். திருமண வாழ்க்கையை வாழ நான் கொடுத்துவைக்கவில்லை' என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்
1460 days ago
1460 days ago
1460 days ago
1460 days ago