மேலும் செய்திகள்
கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்'
1457 days ago
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1457 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1457 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் அதன்பிறகு சென்னை வந்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பின்னர் டில்லிக்கு சென்று ஒருவார காலம் படப்பிடிப்பு நடத்தியவர்கள் தற்போது மீண்டும் சென்னையில் முகாமிட்டு நடத்தி வருகிறார்கள். இதில் விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டு வருவதாக படக்குழுவில் சொல்கிறார்கள்.
இதையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் ரஷ்யா செல்லப்போவதாகவும் இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வில்லனுடன் விஜய் மோதும் அதிரடியான சண்டை காட்சி உள்பட மேலும் சில முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.
பீஸ்ட் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் ஏற்கனவே விஜய்யின் போஸ்டர்கள் வெளியிட்டதை அடுத்து அக்டோபர் 13-ந்தேதி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டர் வெளியாகிறது. அதையடுத்து ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் முக்கியமான இரண்டு அப்டேட்கள் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
1457 days ago
1457 days ago
1457 days ago