உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்., 7ல் பிரபாஸின் 25வது படம் அறிவிப்பு

அக்., 7ல் பிரபாஸின் 25வது படம் அறிவிப்பு

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் பிரபாஸ். அதன்காரணமாக அவர் உலகம் முழுக்க பிரபலமானார். அதையடுத்து அவர் நடித்த சாஹோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனபோதிலும் தற்போது சலார், ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் 25வது படத்தை நாக் அஸ்வின் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். இந்த படமும் பிரபாஸின் முந்தைய படங்களைப்போன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வருகிற 7ந்-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !